News September 18, 2025
சிவகங்கையில் சிறப்பு முகாம் தேதியை அறிவித்த கலெக்டர்

தமிழக முதல்வரின் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமானது, வருகின்ற 20.9.2025 அன்று காளையார்கோவில் ஹோலி ஸ்பிரிட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இதனை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, தங்களது பகுதிகளில் நடைபெறவுள்ள முகாமினை பயன்படுத்திக் கொண்டு, தங்களது உடல்நலத்தினை முறையாக பேணிக்காத்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்
Similar News
News September 18, 2025
சிவகங்கை: நெருங்கும் பருவமழை இது ரொம்ப முக்கியம்..!

சிவகங்கை மக்களே! மழை காலம் தொடங்க இருப்பதால், மின்சார சேவை அடிக்கடி பாதிக்கப்படும். அப்போது பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News September 18, 2025
சிவகங்கை: 10th தகுதி.. ரூ.71,000 சம்பளத்தில் வேலை

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும்.<
News September 18, 2025
சிவகங்கை:மாதம் ரூ.750 உதவி தொகையுடன் படிக்கலாம்

சிவகங்கை முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெறும் நிகழாண்டு நேரடி மாணவர் சேர்க்கை வரும் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை நகல், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டும். பயிற்சியின் போது மாதம் ரூ.750 உதவி தொகை வழஙகப்படும்.