News September 18, 2025

BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

image

தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தி.மலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Similar News

News September 18, 2025

₹100 கோடி வசூலித்த ‘மதராஸி’

image

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படம் உலகளவில் ₹100 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. செப்.5-ம் தேதி வெளியான ‘மதராஸி’ முதல் 2 நாளில் ₹50 கோடி வசூலித்த நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றதால் வசூலில் சறுக்கியதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, ‘டான்’, ‘அமரன்’ வரிசையில் மதராஸியும் ₹100 கோடி வசூலில் இணைந்துள்ளது. நீங்க படம் பார்த்தாச்சா?

News September 18, 2025

பண மழை கொட்டப் போகும் 3 ராசிகள்

image

வரும் 21-ம் தேதி, உத்தரட்டாதி நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இதனால் அதிக நன்மைகள் பெறும் ராசியினர்: *ரிஷபம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும், முடிக்கப்படாத பணிகள் நிறைவடையும், வணிகத்தில் லாபம் பெருகும் *சிம்மம்: தொட்டதெல்லாம் வெற்றியாகும், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம், வருமானம் பெருகும் *துலாம்: தொடர்ந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும், நிலம் வாங்க வாய்ப்பு, நேரம் சாதகமாகும்.

News September 18, 2025

SCIENCE: காக்கைகள் உங்களை கொத்துவது ஏன் தெரியுமா?

image

காக்கைகள், தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய நபரை, சில ஆண்டுகள் கூட ஞாபகம் வைத்து பழிவாங்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. காக்கையின் மூளையில் உள்ள அமிக்தாலா எனும் பகுதிதான், மனிதர்களின் முகங்களை நினைவு வைத்துக்கொள்ள உதவுகிறதாம். எனவே, காக்கையை அச்சுறுத்தும் வகையில் நீங்கள் ஏதாவது செய்திருந்தால் தான், அது உங்கள் தாக்குமாம். காக்கையிடம் குட்டு வாங்கிய அனுபவம் இருக்கா?

error: Content is protected !!