News September 18, 2025
நெல்லை: EXAM இல்லா அரசு வேலை – APPLY….!

நெல்லை மக்களே தேர்வு இல்லாமல் அரசு வேலையை தவறவிடாதீர்கள் ! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் இங்கே <
Similar News
News September 18, 2025
நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

நெல்லை மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற செப்டம்பர் 26ம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். எனவே மாவட்டத்தின் அனைத்து பகுதி விவசாயிகளும் பங்கேற்று பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
மனநல நிறுவனங்கள் மனநல ஆணையத்தில் பதிவு செய்ய உத்தரவு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்; விரைவில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மையங்கள் ஆகியவை முறையாக பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து நிறுவனங்களும் மாநில மனநல ஆணையத்தில் பதிவு செய்ய உத்தரவு.
News September 18, 2025
நெல்லையில் 186 புதிய வாக்கு சாவடிகள்

நெல்லை மாவட்டத்தில் 1,490 வாக்குச்சாவடிகளில் 375 பிரிக்கப்பட்டு, 186 புதியவை சேர்க்கப்பட்டு மொத்தம் 1,676 ஆக உயர்கிறது. 189 வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்படும். 26 இடங்கள் மாற்றம், 10 பழுதடைந்த கட்டிடங்கள் மாற்றியமைப்பு, 6 பள்ளிகளின் பெயர் மாற்றம் உத்தேசிக்கப்பட்டுள்ளது. கருத்துகள், ஆட்சேபனைகளை ஒரு வாரத்தில் வாக்காளர் பதிவு அலுவலரிடம் தெரிவிக்கலாம் என கலெக்டர் சுகுமார் கேட்டுக்கொண்டார் .