News September 18, 2025
திண்டுக்கல்லில் போதைக் காளான் விற்பனை!

திண்டுக்கல்: கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளை குறி வைத்து போதை காளானை விற்பனை செய்வதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பெயரில் இன்று(செப்.18) போதை காளானை விற்பனை செய்த அப்சர்வேட்டரி, கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன்(38) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த போதை காளானை கொடைக்கானல் காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.
Similar News
News September 18, 2025
திண்டுக்கல்லில் நாளை விழிப்புணர்வு கண்காட்சி!

திண்டுக்கல்: மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் இலவச விழிப்புணர்வு நாணயக் கண்காட்சி ஆனது நாளை(செப்.19) முதல் செப்.21 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நந்தவனம் ரோட்டில் உள்ள தரகு மண்டி குமஸ்தா மண்டபத்தில் காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் பங்கேற்க்கிறார்
News September 18, 2025
திண்டுக்கல்லில் மினி பஸ் இயக்க அழைப்பு!

திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட ஏர்போர்ட் நகர் – விராலிப்பட்டி -ஆலம்பட்டி, அய்யலூர், வேடசந்தூர், வெல்லம்பட்டி சாலையூர், நால்ரோடு – சுள்ளறும்பு, பெருமாள்மலை – அடுக்கம், நிலக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன்- தாலுகா அலுவலகம், பெருமாள்மலை – கணேஷ்புரம் ஆகிய இடங்களில் மினி பேருந்துகளை இயக்க ஆர்வம் உள்ளவர்கள் நாளை(செப்.19) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
News September 18, 2025
திண்டுக்கல்: டிரெண்டிங் AI போட்டோ எடிட் செய்தால் அபாயம்!

திண்டுக்கல் மக்களே Google Gemini பெயரில் வைரலாகும் Nano Banana Al ட்ரெண்ட் தொடர்பாக, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை போலியான இணையதளங்கள் அல்லது செயலிகளில் பதிவேற்ற வேண்டாம். ஒரே கிளிக்கில் உங்கள் வங்கிகணக்கு போன்ற தனிநபர் விபரங்கள் திருடப்படலாம் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!