News September 18, 2025

வேலூர்: தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பவரா நீங்கள்?

image

வேலூர் மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அனைத்து பகுதிகளிளிலும் பட்டாசுகள் விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் & வணிகர்கள் நிபந்தனைகளின்படி உரிய ஆவணங்களுடன் “இ” சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் வரும் அக்டோபர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News March 11, 2026

தமிழகக் கல்வித் திட்டம் நிராகரிப்பா? – கதிர் ஆனந்த் கேள்வி

image

தமிழகத்தில் புதிய தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி & ஆராய்ச்சி மையம் (NITTTR) அமைக்கக் கோரி வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார். இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார், சென்னையில் ஏற்கனவே மையம் இருப்பதால் புதிய மையம் தேவையில்லை எனத் தெரிவித்தார். மாநிலத்தின் வளர்ச்சிக்கான இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 11, 2026

வேலூர்: மருமகளால் தப்பிய ‘மாபெரும்’ நஷ்டம்!

image

குடியாத்தம் வினாயகபுரம் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் சேட்டு என்பவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 8 பவுன் தங்க நகைகளைத் திருடினர். அவர் மாடியில் உறங்கியபோது இச்சம்பவம் நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, மருமகள் வெளியூர் சென்றபோது அணிந்து சென்றதால் பெரும் நகைகள் தப்பின. மோப்ப நாய் டோரா மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் குடியாத்தம் டவுன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 11, 2026

வேலூர் மாவட்ட காவல்துறை ரோந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!