News April 12, 2024

உயிரிழந்த விசாரணை கைதியின் உடல் முழுவதும் காயங்கள்

image

மதுரை மதிச்சியம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் வழிப்பறி வழக்குத் தொடா்பாக மதிச்சியம் போலீஸாரால் கடந்த ஏப். 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து ஏப். 5-ஆம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவா் உயிரிழந்தாா். இந்நிலையில், காா்த்திக் உடலில் காயங்கள் இருப்பது உடல் கூராய்வு அறிக்கை மூலம் தெளிவாகியுள்ளது.

Similar News

News December 8, 2025

மேலூர் அருகே கைதான போலீஸ் தலை மறைவு

image

மதுரை நரசிங்கம்பட்டி பாண்டி குமார் 35 திருமயத்தில் போலீசாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு போலீஸ்காரர் டூவீலரில் புதுச்சேரி மது பாட்டில்களை கடத்திய போது, சின்னமந்தையன் செக்கடி பகுதியில் போலீசார் பாண்டி குமாரை கைது செய்து டூவீலர், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறிய போலீஸ்காரர் கூறவே, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு தப்பினார். மேலூர் போலீசார் தேடுகின்றனர்.

News December 8, 2025

மதுரை: ரயில்வே துறையில் ரூ.42,478 சம்பளத்தில் வேலை!

image

மதுரை மக்களே, ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 400 Assistant Manager பணிகளுக்கான அ|றிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 40 வயதுகுட்பட்ட B.E/B.Tech, B.Pharm படித்தவர்கள் டிச.25க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.42,478 வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில், ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த நல்ல தகவலை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News December 8, 2025

மதுரையில் இங்கெல்லாம் மின்தடை

image

மதுரை மாவட்டத்தில் பல்வேறு மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை 9ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அச்சம்பத்து, சமயநல்லூர், வளையங்குளம், எழுமலை, மங்கல்ரவ், டி கிருஷ்ணபுரம், டி ராமநாதபுரம், சின்னகட்டளை, பேரையூர், சாப்டூர், குடிசேரி, வண்டபுலி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் . நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவவும்.

error: Content is protected !!