News April 12, 2024
கடலூர் அருகே பேருந்து மோதி விபத்து

விருத்தாசலம் அடுத்த கொளஞ்சியப்பர் கோவில் அருகே உள்ள நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் கோயம்புத்தூரில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது கொளஞ்சியப்பர் கோவில் அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டையில் மோதி பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 20, 2026
கடலூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

கடலூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 20, 2026
கடலூர்: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

கடலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News February 20, 2026
கடலூர்: இளைஞர்களுக்கு அழகு கலை பயிற்சி – ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் & பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் அழகுக்கலை பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் 10 ஆம் வகுப்பு முடித்து 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் பங்குபெறலாம். மேலும் பயிற்சி முடிந்து ஊதியமாக ரூ 18,000 முதல் 25,000 வரை வழங்கப்படும். இதற்கு <


