News September 18, 2025

குமரி: காதலிக்காக மூதாட்டியிடம் நகை பறிப்பு

image

பள்ளியாடி ஜெபனேசரின் தாயார் ரெஜி(63) 2 நாட்களுக்கு முன்பு கழிவறையில் மயங்கி விழுந்தார். அவரது கழுத்திலிருந்த 11 பவுன் நகை திருடப்பட்டிருந்தது. தக்கலை போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து திருவட்டாரை சேர்ந்த ஆனந்த்(26) என்பவரை உண்ணாமலைக்கடையில் நேற்று கைது செய்தனர். இஞ்சினியரான ஆனந்த் வேலை கிடைக்காததால் பெயிண்டிங் வேலை பார்த்ததாகவும்,காதலிக்காக நகை பறித்ததாகவும் போலீசிடம் தெரிவித்துள்ளார். 

Similar News

News March 5, 2026

குமரி: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்.?

image

குமரி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04546 – 255477) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News March 5, 2026

குமரி: பட்டா மாற்றுவது இனி ரொம்ப EASY..

image

குமரியில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது இந்த <>லிங்க <<>>மூலம் செயலியில் போன் நம்பர், வீட்டு முகவரி போன்ற விவரங்களை பதிவிட்டு LOGIN செய்யவேண்டும். ஒரு வாரத்தில் பட்டா ரெடியாகும்.தகவலை SHARE பண்ணி உதவுங்க.

News March 5, 2026

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை குமரி வருகை

image

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (6ம் தேதி) குமரி மாவட்டம் வருகிறார். மாலை 4 மணிக்கு அவருக்கு நாகர்கோவிலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. 5 மணிக்கு கல்லடி மாமூடு பகுதியில் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுடன் கலந்துரையாடுகிறார். 6 மணிக்கு குளச்சலில் கலைஞர் நூலகத்தை திறந்து வைக்கிறார்.இரவு 7 இறச்சகுளம் பகுதியில் அம்பேத்கர் சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் நெல்லை செல்கிறார்.

error: Content is protected !!