News September 18, 2025
விழுப்புரம்: மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வடகோட்டிப்பாக்கம் கிராமத்தில் மரக்காணம்- திண்டிவனம் சாலையோரம் மின்மாற்றியில் நேற்று பழுது ஏற்பட்டிருந்தது. இதனை சரி செய்ய முருக்கேரி துணைமின் நிலைய மின் ஊழியர்கள் 10 பேர் சென்றிருந்தனர். அப்போது, திடீரென மின்சாரம் தாக்கி தற்காலிக ஊழியரான ரகு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 18, 2025
விழுப்புரம்: 10th, ITI போதும் அரசு துறையில் வேலை!

விழுப்புரம் மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலை. தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் <
News September 18, 2025
பிரதம மந்திரி நிதி உதவி திட்டத்தில் பயன்பெற அழைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் படி நடப்பாண்டு மாவட்டம் முழுவதும் 89 ஆயிரம் விவசாயிகளுக்கு, ரூ.53 கோடியே 40 லட்சம் நிதியுதவி வழங்கப்பட இருப்பதால், தகுதி வாய்ந்த விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் பயன்பெற தங்கள் பகுதி வேளாண் துறை அலுவலர்களை அணுகி பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2019 பிப்ரவரி 1ம் தேதிக்கு முன் கிரையம் செய்த நில உரிமையாளர்கள் பயன்பெறலாம்.
News September 18, 2025
விழுப்புரம் இளைஞர்களே இதோ வேலை வாய்ப்பு!

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை செப். 19 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில் விழுப்புரம் மாவட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.