News September 18, 2025
கையில் Bitcoin.. 12 அடிக்கு டிரம்ப்பின் சிலை!

கிரிப்டோகரன்சியை ஆதரித்து வரும் US அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு முதலீட்டாளர்கள் 12 அடி உயர சிலை அமைத்துள்ளனர். வாஷிங்டன் DC-யில் அமைந்துள்ள அமெரிக்க கேபிடல் கட்டடத்திற்கு வெளியே அமைந்துள்ள இந்த சிலையில், டிரம்ப் தனது கையில் Bitcoin-ஐ ஏந்தியுள்ளார். வெள்ளி மற்றும் அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ள இந்த சிலைக்கு தங்க முலாம் பூசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News September 18, 2025
நேபாளத்துக்கு இந்தியா உதவும்: PM மோடி

நேபாள இடைக்கால பிரதமர் சுசிலா கார்கியுடன், PM மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, சமீபத்தில் நடந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த மோடி, நேபாளத்தில் மீண்டும் அமைதி திரும்புவதற்கும், நிலைத்தன்மை உண்டாவதற்கும் தேவையான ஆதரவை இந்தியா வழங்கும் என உறுதியளித்துள்ளார். முன்னதாக, SM-களுக்கு தடை, ஊழலுக்கு எதிர்ப்பு ஆகியவற்றிற்காக Gen Z தலைமுறையினர் போராட்டம் நடத்தினர்.
News September 18, 2025
மருத்துவமனையில் நடிகர் ரோபோ சங்கர்.. HEALTH UPDATE

நடிகர் ரோபோ சங்கர் சுயநினைவுடன் இருப்பதாக அவரது மகள் இந்திரஜா கூறியுள்ளார். நேற்று ஷூட்டிங்கின்போது திடீரென மயங்கி விழுந்த ரோபோ சங்கர், தனியார் ஹாஸ்பிடல் ஒன்றில் ICU-வில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் பரவியது. இதனிடையே, மயக்கத்திற்கு LOW BP தான் காரணம் எனவும் தனது தந்தை விரைவில் வீடு திரும்புவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
ஆரோக்கியமான உடலுக்கு

வாழ்க்கையில் பெரிய பலன்கள், பெரும்பாலும் குட்டி குட்டி தினசரி பழக்கங்கள் மூலம் ஏற்படுகின்றன. அவற்றை நாம் தினமும் கடைப்பிடிப்பதன் மூலம் நமது ஆற்றல் மேம்படும், நல்ல தூக்கத்தையும் பெறலாம். அந்த குட்டி குட்டி பழக்கங்கள் என்ன என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக பாருங்க. இதில், எதை முதலில் தொடங்க இருக்கீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.