News September 18, 2025

இன்று கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை

image

பதினைந்தாவது புதுச்சேரி சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி இன்று 18ஆம் தேதி வியாழக்கிழமை சட்டப்பேரவையின் மைய மண்டபத்தில் கூட உள்ளது. இந்த கூட்டத்தில் கோப்புகளை தாமதப்படுத்தும் அரசு அதிகாரிகள் மீது அபராதம் விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.

Similar News

News September 18, 2025

புதுச்சேரி சட்டபேரவை கூட்டம் தொடங்கியது

image

புதுச்சேரியில் இன்று 15வது சட்டபேரவையின் 6வது கூட்டத்தொடரின் 2ம் பகுதி தொடங்கியது. சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து கூட்டத்தை துவங்கி வைத்தார். இன்றைய கூட்டத்தில் ஜிஎஸ்டி திருத்த மசோதா, புதுச்சேரியில் தொழில் துவங்குவதை எளிமையாக்குவது குறித்த மசோதா மற்றும் காரணமின்றி கோப்புகளை தேக்கி வைத்திருக்கும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 அபராதம் விதிக்கும் மசோதாக்கல் தாக்கல் செய்யப்பட உள்ளன.

News September 18, 2025

புதுச்சேரி நிவாரணப்பட்டியல் வெளியீடு

image

புதுச்சேரி மீன்வளம் & மீனவர் நலத்துறை மூலம் மீன் பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது. அதன்படி 2025-26 ஆண்டிற்கான தடைக்காலப நிவாரணம் பெறும் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளை சேர்ந்த பயனாளிகளின் 2-ம் கட்ட உத்தேச பட்டியல் இணையதளத்தில் (fisheries.py.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் இன்று (செப்.18) மாலை 5 மணிக்குள் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

News September 18, 2025

புதுச்சேரி- மரப்பாலம் மின்பாதையில் மின்தடை அறிவிப்பு

image

புதுச்சேரி மின்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வில்லியனுார் – மரப்பாலம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று 18ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஜி.என்.பாளையம், நடராஜன் நகர், எழில் நகர், வெண்ணிசாமி நகர், திருக்குறளார் நகர், வசந்தம் நகர், ஆனந்தம் நகர், ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!