News September 18, 2025
கடலூர்: ஆற்றில் மூழ்கி பரிதாப பலி !

கோண்டூர் பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 78). இவர் நேற்று சாவடி கெடிலம் ஆறு அணைக்கட்டு அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது. சவுந்தரராஜன் கால் தவறி ஆற்றில் விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கிய அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
Similar News
News March 7, 2026
கடலூர்: சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் – எஸ்.பி

கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு, சட்ட அலுவல் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஆலோசனை வழங்க சட்ட ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். சட்டப் பட்டப்படிப்பு முடித்து, பார் கவுன்சிலில் பதிவு செய்து, 5 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் வரும் மார்ச் 20-க்குள் கடலூர் எஸ்.பி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
News March 7, 2026
கடலூர் மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

கடலூர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த<
News March 7, 2026
கடலூர்: 258 தேர்தல் மண்டல அலுவலர்கள் நியமனம்

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலினை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மண்டல தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி 2,590 வாக்குச் சாவடி மையங்களுக்கு 33 இருப்பு அலுவலர்கள் உட்பட 258 மண்டல தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் இன்று தெரிவித்துள்ளார்.


