News September 18, 2025

ராம்நாடு: திமுக பிரமுகர் வீட்டில் கொள்ளை! விரைவில் விசாரணை!

image

ராமநாதபுரம் வாலாந்தரவை பகுதியை சேர்ந்தவர் திமுக பிரமுகர் பி.டி.ராஜா. இவரது வீட்டில் 2014ம் ஆண்டு மர்ம நபர்கள் வீடு புகுந்து அவரை கட்டிப்போட்டு ரூ.35 லட்சம் மதிப்புள்ள நகை பணத்தை கொள்ளையடித்தனர். இந்த வழக்கில் 5 பேர் கைதான நிலையில், நேற்று சிபிசிஐடி போலீசார் குற்றப் பத்திரிகையை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்னர். இவ்வழக்கில் விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News September 18, 2025

ராம்நாடு: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க…மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950. எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News September 18, 2025

பரமக்குடி நான்கு வழிச்சாலையில் பயங்கர விபத்து

image

பரமக்குடி அருகே‌ உள்ள வேந்தோணி நான்கு வழிச் சாலையில் இன்று (செப். 18) காலையில் மதுரையில் இருந்து வந்த டாடா மினி லாரியும், எதிரே வந்த மினி லாரியும் அங்குள்ள பேக்கரி அருகே மோதி விபத்து ஏற்பட்டது. இதில், மினி லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்தில் அருகே நின்றிருந்த 3 கார்களும் சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து பரமக்குடி‌ சரக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News September 18, 2025

ராமநாதபுரம் மக்களே., இத மிஸ் பண்ணிடாதீங்க!

image

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நாளை (செப். 19) காலை 10 முதல் 1 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில், 20 தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 10ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ , டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்கள் இம்முகாமில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வேலைதேடும் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!