News September 18, 2025
விழுப்புரம்: ராணுவ வீரர் மாயம்-போலீஸ் விசாரணை

விழுப்புரம் அடுத்து சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ராணுவ வீரராக உள்ளார். கடந்த மார்ச் மாதம் விடுமுறைக்கு வந்த இவர், ஊரில் உள்ளவர்களிடம் அதிகமாக கடன் வாங்கி செலவளித்துள்ளார். இந்த நிலையில் ஜூலையில் பணிக்கு திரும்ப புறப்பட்ட இவர், பணிக்கு செல்லவில்லை என தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மனைவி செல்வி அளித்த புகாரின்பெயரில் விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 18, 2025
விழுப்புரம் இளைஞர்களே இதோ வேலை வாய்ப்பு!

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை செப். 19 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில் விழுப்புரம் மாவட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News September 18, 2025
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தடகள போட்டி

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான தடகள போட்டி நேற்று(செப்.17) நடந்தது. இதில் எஸ்.பி., சரவணன் தலைமை தாங்கி, போட்டியை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செந்தில்குமார், தடகள சங்க தலைவர் பொன்னுசாமி கார்த்திக், செயலாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர்.
News September 18, 2025
விழுப்புரம் விவசாயிகளுக்கு ரூ.53 கோடி ஒதுக்கீடு

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின்படி, நடப்பு ஆண்டு, மாவட்டம் முழுதும் 89 ஆயிரம் விவசாயிகளுக்கு, ரூ.53 கோடியே 40 லட்சம் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. இவை விவசாயிகளின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவியை நேரடியாக மூன்று சம தவணைகளில் அரசு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வழங்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.