News September 18, 2025

திருச்சி: கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

image

திருச்சி மாவட்டம், பெருவளப்பூர் அருகே உள்ள கண்ணாக்குடியை சேர்ந்த மாதவன் (26), நேற்று தனது வயல்வெளியில் விழுந்து கிடந்த மரக்கிளைகளை அகற்றிவிட்டு அருகில் இருந்த கிணற்றில் கை, கால் கழுவுவதற்காக இறங்கியுள்ளார்.‌ அப்போது நிதைத்தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்த அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காணக்கிளியநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 13, 2026

திருச்சி: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு

image

திருச்சி மக்களே, உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<> இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். இதுமட்டும் அல்லாது ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News March 13, 2026

திருச்சி கிரிக்கெட் வீரருக்கு பிசிசிஐ விருது அறிவிப்பு

image

தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில், 19 வயது பிரிவில் தமிழக அணிக்காக விளையாடிய திருச்சியை சேர்ந்த ஹேம் சுதேசனுக்கு பிசிசிஐ விருது அறிவித்துள்ளது. இவர் 2024-25 ஆம் ஆண்டிற்கான கூச் பிஹார் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனை படைத்தார். இந்த சாதனையை பாராட்டும் விதமாக இவருக்கு எம்.ஏ.சிதம்பரம் விருது வரும் 15ஆம் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில் வழங்கப்பட உள்ளது.

News March 13, 2026

திருச்சி: 1000 ஆண்டுகள் பழமையான சிலை கண்டெடுப்பு

image

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் பெரம்பலூரைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செல்வபாண்டியன் கள ஆய்வினை மேற்கொண்டார். அப்போது நெய்க்குப்பை கிராமத்தில் உள்ள வேம்படியான் கோவில் பகுதி மற்றும் அருகில் உள்ள புதூர் உத்தமனூரில் அய்யனார் கோவில் பகுதியில் பிற்சோழர் காலத்தை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலைகளை கண்டறிந்துள்ளார். இந்த சிலைகள் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!