News September 18, 2025
‘புலி’ டைரக்டருடன் இணையும் விமல்

இயக்குநர் சிம்புதேவன் அடுத்ததாக இயக்கும் படத்தில் விமல் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பை ஃபைனான்சியருடன் இணைந்து சிம்புதேவனே இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. முன்னதாக, இயக்கிய ‘போட்’ தோல்வியடைந்ததால், பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற சிம்புதேவனின் ஆசை பாழான நிலையில், தற்போது விமல் இணைந்துள்ளார்.
Similar News
News March 7, 2026
மகளிருக்கு ₹5 லட்சம்.. ஜாக்பாட் தேர்தல் அறிவிப்பு

மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அடுக்கியுள்ளார். அதில் குறிப்பாக, மகளிர் சுய உதவிக்குழுகளில் உறுப்பினராக இருந்து MSME நிறுவனம் தொடங்குவோருக்கு ஆண்டுக்கு 5 லட்சம் வழங்கப்படும் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார். இது 100% மானியம் என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார். மேலும், மகளிர் நலனுக்காக தனி இலாகா தொடங்கப்பட்டு தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும் விஜய் அறிவித்துள்ளார்.
News March 7, 2026
மீண்டும் கூட்டணி அறிவிப்புக்கு நாள் குறித்த ராமதாஸ்

TN-ல் அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீட்டுக்கு சென்றுவிட்டனர். ஆனால், ராமதாஸ் தரப்பு இன்னும் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடவில்லை. மகளிர் தின வாழ்த்து கூறிய ராமதாஸிடம் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இன்னும் 12 நாள்களில் கூட்டணி அறிவிப்பு வரும் என கூறியுள்ளார். ஏற்கெனவே 2 முறை தேதி குறித்தும் கூட்டணி அறிவிப்பு வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.
News March 7, 2026
பழைய சாம்பாரால் பறிபோன உயிர்

பெங்களூருவில் பழைய சாம்பாரால் ஏற்பட்ட சண்டையில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 நாள் பழைய சாம்பாரை மீண்டும் சூடுபடுத்தி பரிமாறியதால் கணவன் கோபத்தில் திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லியை குடித்து உயிரிழந்தார். 27 வயதான இவருக்கு திருமணமாகி 5 வருடங்களான நிலையில் 4 வயதில் குழந்தை உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


