News September 18, 2025
போலி பாகிஸ்தான் வீரர்களை திருப்பி அனுப்பிய ஜப்பான்

ஃபுட்பால் வீரர்கள் என்ற பெயரில் தங்கள் நாட்டிற்குள் நுழைய முயன்ற, 22 பாகிஸ்தானியர்களை ஜப்பான் திருப்பி அனுப்பியுள்ளது. வகாஸ் அலி என்பவர் போலியான ஃபுட்பால் கிளப் நடத்தி, அதன் மூலம் பலரிடம் பணம் வாங்கிக் கொண்டு, பாகிஸ்தானியர்களை ஜப்பானுக்கு அனுப்புவது தெரியவந்துள்ளது. இதை பாகிஸ்தான் விசாரணை அமைப்பும் உறுதி செய்துள்ளது. கடந்த 2024-லிலும், வாகாஸ் இதேபோல் 17 பேரை ஜப்பானுக்கு அனுப்பியுள்ளாராம்.
Similar News
News September 18, 2025
21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
News September 18, 2025
பாண்டியர் கோட்டை புகும் சோழ இளவல்?

சங்க கால தமிழ், எயினர் மரபு, ரணதீர பாண்டியனின் தீரம் என ‘யாத்திசை’ படத்தை வரலாற்று பிரமாண்டமாக படைத்திருப்பார் இயக்குநர் தரணி ராசேந்திரன். அவர் அடுத்து இயக்கும் படத்தில், சோழ இளவல் ‘பொன்னியின் செல்வர்’ ரவி மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தை ரவி மோகனே தயாரிக்க இருக்கிறாராம்.
News September 18, 2025
கொள்கை இல்லாமல் தொடை நடுங்கும் EPS: CM ஸ்டாலின்

திராவிடம் என்றால் என்ன என்று தனக்கு தெரியாது என சொன்னவர், தற்போது அதிமுக தலைமை பொறுப்பில் இருப்பதாக EPS-ஐ CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் என்ற மாண்பு இல்லாமல் என்னை ஒருமையில் தரம் தாழ்ந்து விமர்சிப்பதாகவும், கொள்கை இல்லாமல் தொடை நடுங்கும் EPS-ன் தரத்தை மக்கள் அறிவர் என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், ரெய்டில் இருந்து தப்பிக்க அதிமுகவை அடகு வைத்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.