News September 18, 2025
₹3.28 லட்சம் விலை குறைத்த கார் நிறுவனம்

GST மறுசீரமைப்பு எதிரொலியாக பல்வேறு கார், பைக் நிறுவனங்கள் தங்களது வாகனங்களின் விலையை குறைத்து வருகின்றன. அந்த வகையில், SKODA கார் நிறுவனம் விலையை குறைத்துள்ளது. அதன்படி, Kodiaq மாடல் ₹3.28 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், Kylaq – ₹1.19, Slavia – ₹63,000, Kushaq – ₹61,000 வரை விலை குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு வரு 22-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
Similar News
News September 18, 2025
செப்டம்பர் 18: வரலாற்றில் இன்று

*உலக நீர் கண்காணிப்பு நாள். *1924 – மகாத்மா காந்தி இந்து-முசுலிம் ஒற்றுமைக்காக 21-நாள் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். 1945 – ஆதி திராவிடர் இயக்கத் தலைவர் இரட்டைமலை சீனிவாசன் உயிரிழந்தநாள். *1948 – ஐதராபாத் இராணுவம் சரணடைய ஒப்புக்கொண்டதை அடுத்து, இந்திய யூனியன் தனது ராணுவ நடவடிக்கையை கைவிட்டது. *2016 – ஜம்மு காஷ்மீரில் யூரி பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில், 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
News September 18, 2025
GST 2.0: வாகன உதிரிபாகங்கள் விலையும் குறைகிறது

GST 2.0 எதிரொலியாக வாகனங்கள், டிவிக்கள் விலை குறைந்த நிலையில், தற்போது வாகன உதிரிபாகங்களின் விலையும் குறைந்துள்ளது. ஆமாம், அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பயணிகள் வாகனங்களின் டயர்கள் ₹300 முதல் ₹1,500, டிரக், லாரி, பஸ்களின் டயர்கள் ₹2,000 வரையிலும் குறைகின்றன. இதனால், வணிக வாகன உரிமையாளர்கள், விவசாயிகள், பைக் ஓட்டிகள் பயனடைவார்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
News September 18, 2025
ரணகளமாகும் களம்: சூப்பர் 4 சுற்றில் மீண்டும் IND vs PAK !

ஆசிய கோப்பை தொடரில் நேற்றைய UAE உடனான போட்டியில் வென்றதன் மூலம், பாகிஸ்தான் அணி ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால், வரும் 21-ம் தேதி (ஞாயிற்றுகிழமை) நடைபெற உள்ள ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளது. ஏற்கனவே லீக் போட்டியில் பெற்ற தோல்விக்கு பாகிஸ்தான் அணி பழிதீர்க்குமா அல்லது இந்திய அணி தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டுமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.