News April 12, 2024
ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து

ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படுமென மோடி அறிவித்துள்ளார். உதம்பூர் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், ஜம்மு-காஷ்மீரில் இதுவரை நடந்ததெல்லாம் வெறும் டிரைலர்தான் என்றும், ஜம்மு-காஷ்மீருக்காக தாம் புதிய, அழகிய சித்திரத்தை வரைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வெகு காலம் இல்லை என்றும் தெரிவித்தார்.
Similar News
News August 13, 2025
3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். CM ஸ்டாலின் முயற்சியின் காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் ₹10.32 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஈரோடு மாவட்டத்தில் போதிய இடவசதி கிடைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்காத அளவில் IT பூங்கா கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
News August 13, 2025
கவர்ச்சி கேரக்டர்களுக்கே அழைக்கிறார்கள்: பூஜா

இந்தி சினிமாவில் தன்னை கவர்ச்சி கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க அழைப்பதாக நடிகை பூஜா ஹெக்டே வேதனை தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கில் தான் நடித்த படங்களை அவர்கள் பார்க்கவில்லை என தான் நினைப்பதாகவும் கூறினார். ரெட்ரோ படத்தில் ருக்மிணி கதாப்பாத்திரமாக தன்னை மாற்றிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்க்கு இந்த இடத்தில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
News August 13, 2025
சின்னசாமி மைதானத்துக்கு தொடரும் சோதனைகள்

செப்.30-ம் தேதி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் துவங்குகிறது. இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த இத்தொடரின் போட்டிகளை திருவனந்தபுரத்திற்கு மாற்ற BCCI முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காவல்துறை அனுமதியை பெற கர்நாடக கிரிக்கெட் சங்கம் தவறிவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.