News September 17, 2025
நீங்கள் தான் அடுத்த தலைமுறைக்கான விதை

உங்கள் குடும்பத்தினர் செய்த தொழில் (அ) வேலையையே நீங்கள் செய்கிறீர்களா? (அ) மாறுபட்ட, இதுவரை உங்கள் குடும்பத்தினர் எவரும் எண்ணி பார்க்காத வேலையில் உள்ளீர்களா? அவ்வாறு உண்டு என்றால், நீங்கள்தான் அடுத்த தலைமுறைக்கான புதிய வித்து. இதை நீங்கள் அடைவதற்காக மேற்கொண்ட முயற்சிகளை மற்றவர்களுக்கும் சொல்லி ஊக்கப்படுத்துங்கள். இதுவே உங்களுக்கான தன்னிறைவாக அமையும். அது எந்த வேலை என்று கமெண்ட்டில் சொல்லுங்கள்.
Similar News
News March 8, 2026
அது நல்ல விஷயம் இல்லை: திவ்யா கணேஷ்

விஜய் – சங்கீதா விவாகரத்துக்கு இடையே, த்ரிஷாவும், விஜய்யும் திருமண நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றது சர்ச்சையானது. இதுகுறித்து பிக்பாஸ் வின்னர் திவ்யா கணேஷ் பேசுகையில், திருமணம் என்றால் 1,000, 2,000 பேர் வரத்தான் செய்வார்கள். தெரிந்த இரண்டு பேர் வந்தால் Hi சொல்லி சேர்ந்து போவார்கள்தானே. அப்படித்தான் இதுவும் என்றார். ஒருவரின் பெர்சனலுக்குள் ரொம்ப ஆழமாக போவது நல்ல விஷயம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
News March 8, 2026
பிரிட்டனின் உதவி தேவையில்லை: டிரம்ப்

ஈரானுடனான போரில் பிரிட்டனின் ஆதரவு இல்லாததை எப்போது நினைவு கொள்வேன் என டிரம்ப் கூறியுள்ளார். தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அவர், ஒரு காலத்தில் சிறந்த நட்பு நாடான இங்கிலாந்து, இறுதியாக தற்போது 2 விமானம் தாங்கி போர்க் கப்பல்களை அனுப்புவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது; ஆனால் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ள ஈரான் போரில், தற்போது கூட்டு சேரும் நபர்கள் தங்களுக்கு தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
News March 8, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 8, மாசி 24 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: பஞ்சமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.


