News September 17, 2025
உலக கிரிக்கெட்டின் Don-ஆன இந்தியா!

ODI, T20 கிரிக்கெட்டின் தரவரிசை பட்டியலில் இந்தியாதான் முதல் இடத்தில் உள்ளது. அதே போல, T20 பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, பவுலிங்கில் வருண் சக்கரவர்த்தி, ஆல் ரவுண்டரில் ஹர்திக் ஆகியோர் முறையே முதல் இடத்தில் உள்ளனர். மேலும், டெஸ்ட் பவுலர்களில் பும்ராவும், ஆல் ரவுண்டர்களில் ஜடேஜாவும் முதல் இடத்தில் உள்ளனர். ODI பேட்டிங்கில் கில் நம்பர் 1 வீரராக உள்ளார். கொடி பறக்குதா!
Similar News
News September 18, 2025
இந்த நடிகைக்கு ₹530 கோடி சம்பளமாம்..!

உலகம் முழுவதுள்ள இளசுகளை கவர்ந்துவரும் ஹாலிவுட் இளம் நடிகை சிட்னி ஸ்வீனி, பாலிவுட் சினிமாவில் நடிக்க இருப்பதாக ஒரு செய்தி காட்டுத் தீ போல் பரவி வருகிறது. இதில், சுவாரஸ்யம் என்னவென்றால், அவருக்கு ₹530 கோடி சம்பளம் வழங்க பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் முன்வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையா எனத் தெரியவில்லை. அப்படி உண்மையானால், பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரமே அவர்தான்.
News September 17, 2025
சற்றுமுன்: விஜய் புதிய அறிவிப்பை வெளியிட்டார்

‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திமுகவின் உறுப்பினர்கள் சேர்க்கைக்கு டஃப் கொடுக்கும் வகையில், ‘வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற தவெகவின் உறுப்பினர் சேர்க்கை பணிகளை விஜய் தீவிரப்படுத்தியுள்ளார். 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து பிரத்யேக செயலியை அவர் வெளியிட்டிருந்தார். தற்போது, உறுப்பினர் சேர்க்கைக்காக 234 தொகுதிகளுக்கும் தலா 8 நிர்வாகிகளை விஜய் நியமித்துள்ளார். 2 கோடியை எட்டுமா?
News September 17, 2025
BREAKING: இபிஎஸ் வீட்டில் பரபரப்பு

சென்னையில் உள்ள EPS வீட்டில் இரவில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. அதற்கு காரணம், அவரது வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதுதான். DGP அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் இ-மெயில் அனுப்பியதன் அடிப்படையில், மோப்பநாய் உதவியுடன் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். இறுதியில், அது புரளி என தெரிய வந்தது. கவர்னர் மாளிகை, நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.