News September 17, 2025
பாரத ரத்னா விருது பெற்ற தமிழர்கள் யார் யார்?

இந்தியாவின் மிகவும் உயரிய விருதான பாரத ரத்னாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு வழங்க மத்திய அரசிடம் EPS கோரிக்கை வைத்துள்ளார். மொத்தமாக இந்தியாவில் இதுவரை 53 பேருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. அதில் சி.வி.ராமன் தொடங்கி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்ட 9 தமிழர்கள் பாரத ரத்னா விருதை பெற்றுள்ளனர். மற்றவர்கள் யார் யார் என்பதை மேலே SWIPE செய்து பாருங்கள்
Similar News
News September 17, 2025
கணவருக்கு இது தார்மீக பொறுப்பு: கொல்கத்தா HC

நல்ல உடல்தகுதியுள்ள கணவர், மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்குவது என்பது சமூக, தார்மீக பொறுப்பு என்று கொல்கத்தா HC தெரிவித்துள்ளது. தனக்கு வேலையும் வருமானமும் இல்லை என்ற கணவரின் வாதத்தை ஏற்க மறுத்த HC, பராமரிப்பு தொகையாக மாதம் ₹4,000 வழங்க உத்தரவிட்டுள்ளது. கணவனின் குடும்பத்தார் விவாகரத்து கோர வற்புறுத்தியதால், பராமரிப்பு தொகை வழங்க கோரிய மருமகளின் மனு மீது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 17, 2025
நானும் Peak-ல இருக்கும்போது தான் வந்தேன்: சரத்குமார்

கரியரின் உச்சத்திலிருந்து வந்துள்ளேன், நான் சம்பாதிக்காத பணமா? என்ற விஜய்யின் பேச்சுக்கு சரத்குமார் பதிலடி கொடுத்துள்ளார். 1994-ல் நாட்டாமை, சூர்யவம்சம் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்துதான் நானும் அரசியலுக்கு வந்ததாக கூறியுள்ளார். ரிட்டயர்மன்ட்டுக்கு பிறகு தான் அரசியலுக்கு வரவில்லை என்ற அவர், மதுரையில் தனது கட்சிக்கும் கூட்டம் கூடியது, அதன் வீடியோவை கூட நான் காட்டுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
News September 17, 2025
TTF வாசன் தாலி கட்டினார் ❤️❤️ PHOTOS

தான் 5 ஆண்டுகளாக காதலித்து வந்த ஆசை மாமன் மகளை நேற்று கரம் பிடித்தார் TTF வாசன். இருப்பினும், மனைவியின் முகத்தை மறைத்தபடியே போட்டோவை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இன்று தாலி கட்டுவது போன்றும், மெட்டி போடுவது போன்றும் உள்ள போட்டோஸை பகிர்ந்துள்ளார். ஆனால், தற்போதும் முகத்தை மறைத்தவாறே போட்டோவை வெளியிட்டுள்ளதால், ‘யார் அந்த ஸ்வீட்டினு சொல்லுங்க ப்ரோ’ என்று நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.