News April 12, 2024
BREAKING: “பாஜக படுதோல்வி”

பத்தாண்டு காலம் ஆட்சி செய்த பாஜக படுதோல்வி அடைந்ததாக முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார். மக்களவைத் தேர்தலில் முக்கிய பிரச்னைகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வை சுட்டிக்காட்டிய அவர், பாஜக ஆட்சியின் முடிவுக்கான ‘கவுண்ட் டவுன்’ தொடங்கிவிட்டது. சிலரை சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது. அன்றாட வாழ்வாதார பிரச்னைகளை தீர்ப்பதில் பாஜக தோல்வி அடைந்ததை மக்களே உணர்ந்துள்ளனர் என கூறியுள்ளார்.
Similar News
News February 2, 2026
FLASH: சரிவில் இருந்து மீண்ட பங்குச்சந்தைகள்!

பட்ஜெட் எதிரொலியால் நேற்று கடும் சரிவைக் கண்ட பங்குச்சந்தைகள் இன்று மீண்டுள்ளது. சென்செக்ஸ் 462 புள்ளிகள் உயர்ந்து 81,185 புள்ளிகளிலும், நிஃப்டி 101 புள்ளிகள் உயர்ந்து 24,927 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. ITC, பார்மா நிறுவனங்களின் பங்குகள் சற்று சரிவைக் கண்டுள்ள போதிலும், வங்கி, ஐடி நிறுவனங்களின் பங்குகள் உயர்வைக் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News February 2, 2026
BREAKING: தங்கம் விலை மேலும் குறைந்தது

தங்கம் விலை இன்று(பிப்.2) சவரனுக்கு ₹7,600 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராமுக்கு ₹950 குறைந்து ₹13,950-க்கும், சவரன் ₹7,600 குறைந்து ₹1,11,600-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் <<19026634>>தங்கம் விலை தொடர் சரிவு<<>>, இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கியதே இன்று தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறைய காரணமாகும். SHARE IT.
News February 2, 2026
தேர்தல் அறிக்கையில் இதை அறிவிக்கிறாரா EPS?

தேர்தல் அறிக்கை தயாரிக்க TN மக்களிடம் கருத்து கேட்டுள்ளார் EPS. அப்போது, டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெரும்பாலான பெண்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனால் வாக்குறுதியில் மதுவிலக்கை அறிவிப்பது குறித்து EPS மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2016 தேர்தலில் பூரண மதுவிலக்கு வாக்குறுதியை கொடுத்த திமுகவுக்கு அதுவே நெகடிவ்வாக முடிந்தது. இதனால் EPS குழப்பத்தில் இருக்கிறார் என்கின்றனர்.


