News September 17, 2025
டிகிரி போதும்.. மத்திய அரசில் ₹47,600 சம்பளத்தில் வேலை!

Union Public Service Commission-ல் காலியாக உள்ள 213 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைக்கேற்ப டிகிரி, சட்டத்தில் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ச்சி நடைபெறும். சம்பள விகிதம்:₹47,600 முதல் ₹1,18,500 வரை. இதற்கு வரும் அக்டோபர் 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு <
Similar News
News September 17, 2025
இபிஎஸ் சரணடைந்து விட்டார்: ஸ்டாலின்

திமுக முப்பெரும் விழாவில், EPS-ஐ CM ஸ்டாலின் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். அண்ணாயிசமாக இருந்த அதிமுகவின் கொள்கை, அடிமையிசமாக மாறி, அமித்ஷாவே சரணம் என EPS சரணடைந்து விட்டார் என விமர்சித்துள்ளார். மேலும், முழுதாக நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்பார்கள் என்ற அவர், காலிலேயே விழுந்த பிறகு கர்சீப் எதற்கு என்றுதான் இப்போது பலர் கேட்பதாக, அமித்ஷா – EPS சந்திப்பை சாடியுள்ளார்.
News September 17, 2025
இந்தியாவின் வியர்வையும் வாசமும் இருக்கணும்: மோடி

வளர்ச்சியடைந்த பாரதம் 2047-ஐ அடைவதற்கு சுயசார்பு இந்தியா ஒரு முக்கிய பாதையை அமைத்து கொடுக்கும் என்று PM மோடி தெரிவித்துள்ளார். இது பண்டிகை காலம் என்பதால், Made in India பொருள்களை வாங்க வேண்டும் என்று 140 கோடி இந்தியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பின்னால் ஒரு இந்தியரின் வியர்வையும், நம் மண் வாசமும் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
News September 17, 2025
Beauty Tips: கழுத்தில் உள்ள கருமையை சிம்பிளா நீக்கலாம்

➤பாதி எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால் கழுத்தில் உள்ள கருமை அகலும். ➤பட்டை பொடியில், தேன் கலந்து கழுத்தில் தடவுங்கள். இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதன் மூலம் கழுத்திலுள்ள கருமை நீங்குவதோடு தழும்புகள் மறையும். SHARE.