News September 17, 2025

பெரியாருக்கு விஜய் மரியாதை

image

தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், அவரது சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், சமூக சீர்திருத்த கொள்கை, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் போன்ற சீர்திருத்த சிந்தனைகள் வாயிலாக நம் மக்களுக்காக உழைத்தவர் பெரியார் என X தளத்தில் விஜய் பதிவிட்டுள்ளார். முன்னதாக நாகை, திருவள்ளூர் மாவட்ட செயலாளர்களிடம், பரப்புரை பயணம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

Similar News

News September 17, 2025

வசூலை அள்ளிய பட்ஜெட் படங்கள்

image

சமீப காலமாக குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் எதிர்பாராத விதமாக ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. அந்த வகையில் எந்தெந்த குறைந்த பட்ஜெட் படங்கள், எவ்வளவு வசூலை அள்ளியது என்பது மேலே போட்டோக்களாக உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பாருங்கள். அதை தவிர வேறு ஏதேனும் படம் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.

News September 17, 2025

தமிழகத்துக்கு கூடுதலாக 350 MBBS இடங்கள்

image

தமிழகத்திற்கு கூடுதலாக 350 MBBS இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கூடுதல் மருத்துவ இடங்கள் அனுமதிக்கான கல்லூரிகள் பட்டியலை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், TN-ல் 7 தனியார் கல்லூரிகளுக்கு தலா 50 இடங்கள் என மொத்தம் 350 இடங்கள் அதிகரித்துள்ளன. இந்தியளவில் 6,850 இடங்கள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த MBBS இடங்கள் எண்ணிக்கை 1,23,700ஆக உயர்ந்துள்ளது.

News September 17, 2025

திமுக மட்டுமே வெற்றி பெறும்: செந்தில் பாலாஜி

image

2026-ல் திமுகவின் வெற்றிக் கணக்கை கரூரில் இருந்து தொடங்கியுள்ளதாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். திமுக முப்பெரும் விழாவில் பேசிய அவர், எதிரிகள் யாராக இருந்தாலும், எந்த வடிவில் வந்தாலும், எத்தனை பேராக வந்தாலும் உறுதியாக நாம்தான் வெற்றி பெற போகிறோம், நாம் மட்டுமே ஜெயிக்க போகிறோம் என்றும் சூளுரைத்துள்ளார். மேலும், 200 தொகுதிகளில் வெல்வோம், வரலாறு படைப்போம் என்றும் கூறினார்.

error: Content is protected !!