News September 17, 2025
நாகை ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு

கலைமகள் சபா சொத்துக்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பு வழங்கப்படுகிறது என்றும் இதுகுறித்த விரிவான அறிக்கையை 19ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நேரில் ஆஜராகி ஏன் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என விளக்கம் அளிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டுள்ளது.
Similar News
News September 17, 2025
நாகை: ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். <
News September 17, 2025
பெரியார் சிலைக்கு எம்எல்ஏ நாகை மாலி மரியாதை

தமிழகம் முழுவதும் தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாள் இன்று(செப்.17) கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில், கீழ்வேளூர் எம்எல்ஏ நாகை மாலி, பெரியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், CPIM கட்சியின் நாகை நகரச் செயலாளர் வெங்கடேசன், மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் முகேஷ் கண்ணன், CITU மாவட்ட துணைச் செயலாளர் ஜீவா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News September 17, 2025
இந்துசமய அறநிலையதுறை எச்சரிக்கை

நாகப்பட்டினம்-கீழ்வேளூர் புறவழிச்சாலை பொரவச்சேரி என்ற இடத்தில் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில், தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ய முற்படுவதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில், நாகை இந்துசமய அறநிலையத்துறை சார்பில், கோயில் நிருவாகம் சார்பில், சம்பந்தப்பட்ட இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.