News September 17, 2025

நாமக்கல்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

நாமக்கல் மக்களே வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987 தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

Similar News

News September 17, 2025

நாமக்கல்: தொழிலாளி மர்ம மரணம்!

image

தஞ்சாவூரை சேர்ந்த விக்னேஷ் என்ற தொழிலாளி குமாரபாளையத்தில் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு பந்தல் மற்றும் அலங்காரம் செய்யும் வேலை செய்வதற்காக நேற்று வந்தார். அப்பொழுது நேற்று இரவு குமாரபாளையம் பிரதான சாலையில் உள்ள மூன்றாவது மாடியில் அவர் தங்கி இருந்த நிலையில், இன்று காலை பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 17, 2025

விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய எம்பி மாதேஸ்வரன்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகத்தில் நடைபெற்ற மேரா யுவ பாரத் திட்டத்தின் கீழ் இளைஞர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்களை வழங்கினார். மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், மாவட்ட சமூகநலத்துறை அலுவலர், மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News September 17, 2025

பாண்டமங்கலம்: புரட்டாசி வழிபாடு

image

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் பாண்டமங்கலம் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் இன்று புரட்டாசி மாத பிறப்பைமுன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது. காலை முதல் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

error: Content is protected !!