News April 12, 2024
வெப்ப அலை: பிரதமர் மோடி உத்தரவு

ஏப்ரல் முதல் ஜூன் வரை இந்தியாவில் வழக்கத்தைவிட மிக அதிகமாக வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் எச்சரித்ததை தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று இரவு ஆலோசனை நடத்தினார். அதில், வெப்ப அலையை சமாளிக்க மத்திய – மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து செயல்பட வேண்டும். அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், குளுகோஸ், குடிநீர் விநியோகம் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News February 1, 2026
விஜய்யின் பில்டப் ஓவராக உள்ளது: திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சித்த விஜய்க்கு, EX அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அடுக்கடுக்கான கேள்விகளை வைத்துள்ளார். நீங்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு? உண்மையிலேயே White-ல் வாங்குவது எவ்வளவு? பிளாக்கில் வாங்குவது எவ்வளவு? என கேட்டுள்ளார். விஜய் வருமானத்தை மறைத்ததாக IT வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், அவர் பில்டப் மட்டும் ஓவராக கொடுப்பதாகவும் திண்டுக்கல் சீனிவாசன் சாடியுள்ளார்.
News February 1, 2026
பயங்கரவாதிகள் தாக்குதல்.. 125 பேர் பலி!

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பலூசிஸ்தான் பகுதியில், ராணுவத்திற்கும் BLA கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த தாக்குதலில் 125 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 12 நகரங்களில் நடந்த தாக்குதலில், 18 பாதுகாப்புப் பணியாளர்களும், 15 மக்கள், 92 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பலூசிஸ்தானுக்கு இந்தியா உதவுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டிய நிலையில், அதனை இந்தியா மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News February 1, 2026
டீச்சருக்கு 161 ஆண்டுகள் சிறை தண்டனை.. அதிர்ச்சி பின்னணி!

ஆட்டிசம் பாதித்த சிறுவனை (10) பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் டீச்சருக்கு 161 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் சிறப்பு பள்ளியில் படித்து வந்த சிறுவனை, ஆசிரியர் சந்தோஷ் குமார்(56) பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுவன் எழுதியும், வரைந்தும் காட்டியுள்ளான். பெற்றோர் அளித்த புகாரில், கேரள விரைவு நீதிமன்றம் ₹87,000 அபராதத்துடன், 161 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்துள்ளது.


