News September 17, 2025

சென்னை: புரட்டாசி முதல் நாள் இங்கே செல்லுங்கள்

image

கடன் தொல்லையை நீக்கும் கங்காதீசுவரர்: சென்னை புரசைவாக்கத்தில் பிரசித்திபெற்ற கங்காதீசுவரர் கோயில் உள்ளது. புரட்டாசி முதல் நாளான இன்று இங்கு வந்து தீபம் ஏற்றி வழிபட்டால் EMI உள்ளிட்ட அனைத்து கடன் தொல்லைளும் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பியாக உள்ளது. மேலும், இறைவனை மனதார வேண்டினால், சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். கடன் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News September 17, 2025

பெரியார் படத்திற்கு முதல்வர் மரியாதை

image

தந்தை பெரியார் 147 ஆவது பிறந்தநாள் இன்று (செப்.17) கொண்டாடப்படுகிறது. சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில், அவரது நினைவிடத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தந்தை பெரியார் படத்திற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News September 17, 2025

சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

image

சென்னையில் இருந்து 165 பயணிகளுடன் நேற்று இரவு பெங்களூருக்கு புறப்பட்ட விமானத்தில் நடுவானில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட நிலையில், அவசர அவசரமாக விமானம் மீண்டும் சென்னையில் தரையிறங்கியது. உடனடியாக மாற்று விமானம் ஏற்பாடு செய்து பயணிகள் பெங்களூருக்கு செல்ல அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பயணிகள் செல்ல தாமதம் ஏற்பட்டது.

News September 17, 2025

சென்னையில் தாலுகா வாரியாக மழை நிலவரம்

image

சென்னை மாவட்டத்தில் நேற்று (செப் 16) காலை 8:30 முதல் இன்று காலை 6:30 மணி வரை தாலுகா வாரியாக அயனாவரம் – 17, எழும்பூர் – 19.9, கிண்டி – 9.6, மாம்பலம் – 34.8, மயிலாப்பூர் – 82.6, பெரம்பூர் – 32.3, புரசைவாக்கம் – 26.4, தண்டையார்பேட்டை – 23.4, ஆலந்தூர் 1.2, அம்பத்தூர் – 35, சோழிங்கநல்லூர் – 6.7 என மி.மீட்டரில் மழை பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!