News April 12, 2024
வேலூர்: மணல் கடத்திய லோடு வேன் பறிமுதல்

வேலூர் சத்துவாச்சாரி போலீசார் நேற்றிரவு (ஏப்ரல் 11) பிள்ளையார் குப்பம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு லோடு வேன் வந்தது. போலீசாரை பார்த்ததும் வேனை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் போலீசார் லோடு வேனை சோதனை செய்த போது மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் வேனை போலீசார் பறிமுதல் செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
Similar News
News August 22, 2025
வேலூர்: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

வேலூர் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <
News August 22, 2025
வேலூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு ஆகிய இடங்களில் இன்று (ஆகஸ்ட்-22) நடக்கிறது. இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை மனுவாக வழங்கலாம். குறிப்பாக, மகளிர் உதவித்தொகை பெற முடியாத பெண்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News August 22, 2025
வேலூர் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம்

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டம் ரங்காபுரத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ் கலந்து கொண்டு அறிவுரை வழங்க உள்ளார். எனவே விழா குழுவினர்கள் இதில் கலந்து கொள்ள அழைத்துள்ளனர்.