News September 17, 2025

புதுச்சேரி விவசாயிகளுக்கு ரூ.2,000

image

புதுச்சேரி வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் வேளாண் தொழிலாளர் நல சங்கத்தின் மூலம் மழைக் காலங்களில் பாதிக்கப்படும் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 ஒவ்வொரு வருடமும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் வழங்கப்பட உள்ளது.மேலும் அன்னக்கூடை மற்றும் அரிவாள் உள்ளிட்ட உபகரணங்கள் விலையில்லா பொருட்களாக வழங்குவதற்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 17, 2025

புதுச்சேரி: ஜிப்மரில் பெண்களுக்கான மருத்துவ முகாம்

image

புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான தேசிய ஊட்டச்சத்து மாதத்தில், 16 நாள் நாடு தழுவிய “ஆரோக்கியமான பெண் வலிமையான குடும்பம்” என்ற பெண்களுக்கான சிறப்பு ஆரோக்கிய முகாம் இன்று 17.9.25 நடைபெற உள்ளது. நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார முகாம்களை உள்ளடக்கிய இந்த முயற்சியாகும். SHARE NOW

News September 17, 2025

புதுச்சேரி: முதல்வர் முக்கிய அறிவிப்பு

image

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி விரைவில் எந்த மாதத்தில் அரிசி வழங்காமல் விடுபட்டதோ அந்த மாதத்திற்கான அரிசி முதல் வழங்கப்படும். இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி 200க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்கள் நிரப்புவதற்கு கோப்புகள் தயாரிக்கப்பட்டு உள்ளது. விரைவில் நிரப்பப்படும் என்று அவர் தெரிவித்தார்.

News September 17, 2025

புதுவையில் இலவச அரிசிக்கு கவர்னர் ஒப்புதல்

image

இலவச அரிசிக்கான டெண்டரில், மத்திய அரசு ஊழியர்களின் கூட்டுறவு நிறுவனமான கேந்திரிய பந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், கான்பெட் நிறுவனத்திற்கு 61,800 மெட்ரிக் டன் இலவச அரிசியை சப்ளை செய்ய உள்ளது. இந்த கோப்பிற்கு கவர்னர் நேற்று ஒப்புதல் அளித்தார். அதனைத் தொடர்ந்து, அடுத்த வாரத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, விடுபட்ட மாதங்களுக்கான அரிசியையும் சேர்த்து வழங்க ஏற்பாடுகள் நடைபெறுகிறது.

error: Content is protected !!