News September 17, 2025
எப்போதும் மக்கள் பக்கம் விஜய்.. தவெகவினர் பதிலடி

அரசியலுக்கு வருவதற்கு முன், மக்களுக்காக என்ன செய்தார் விஜய் என NTK உள்ளிட்ட கட்சிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகின்றன. இதற்கு 2016-ல் ஜல்லிக்கட்டு போராட்டம், 2017-ல் தங்கை அனிதா மரணம், 2018-ல் ஸ்டெர்லைட் படுகொலை, 2024-ல் கள்ளச்சாராய இறப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளில் மக்கள் பக்கம் நின்றவர். 2026-ல் ‘People’s only hope’ என விஜய்யின் போட்டோவுடன் தவெகவினர் பதிலடி கொடுக்கின்றனர்.
Similar News
News September 17, 2025
BREAKING: விஜய் கட்சியினருக்கு எச்சரிக்கை

தவெக தலைவர் விஜய், தூத்துக்குடியில் அக்.11-ம் தேதி பரப்புரை மேற்கொள்ள அனுமதி கோரி போலீஸில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், விஜய் வரும்போது தவெகவினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எச்சரித்துள்ளது. விஜய்யின் தேர்தல் பரப்புரைக்கான அனுமதியை போலீஸ் பாரபட்சமின்றி பரிசீலிக்க <<17735795>>தவெக கோர்ட்டை நாடியது<<>> குறிப்பிடத்தக்கது.
News September 17, 2025
உலக கிரிக்கெட்டின் உச்சம் தொட்ட தமிழர்!

ICC வெளியிட்டுள்ள ஆண்கள் T20 பவுலிங் தரவரிசை பட்டியலில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி(733 புள்ளிகள்) முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். T20 கிரிக்கெட்டில் பும்ரா & ரவி பிஷ்னோய்க்கு பிறகு, முதல் இடத்துக்கு முன்னேறிய வீரர் என்ற பெருமையையும் வருண் சக்கரவர்த்தி பெற்றுள்ளார். ஆசிய கோப்பையில் UAE & பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக அவர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 17, 2025
பெரியாருக்கு விஜய் மரியாதை

தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், அவரது சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், சமூக சீர்திருத்த கொள்கை, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் போன்ற சீர்திருத்த சிந்தனைகள் வாயிலாக நம் மக்களுக்காக உழைத்தவர் பெரியார் என X தளத்தில் விஜய் பதிவிட்டுள்ளார். முன்னதாக நாகை, திருவள்ளூர் மாவட்ட செயலாளர்களிடம், பரப்புரை பயணம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.