News September 17, 2025

தீபாவளி சிறப்பு ரயில்- டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!

image

சேலம் வழியாக இயக்கப்படும் சென்னை சென்ட்ரல்- போத்தனூர் வாராந்திர சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில், நாகர்கோவில்-சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில், சென்னை சென்ட்ரல்-செங்கோட்டை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (செப்.17) காலை 8 மணிக்கு தொடங்கியது. சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள கணினி முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

Similar News

News September 17, 2025

சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய அறிவிப்பு!

image

ஈரோடு-ஜோக்பானி (பீகார்) இடையே அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் வாராந்திர சிறப்பு ரயில் வரும் செப்.25- ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது என்று சேலம் ரயில்வே கோட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சேலம், காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

News September 17, 2025

சேலம்: பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

image

சேலம் பட்டதாரிகளே..தொழில் முனைய விரும்புவரா நீங்கள்..? உங்கள் சொந்த ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க மக்களே!

News September 17, 2025

மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர்ப்பு சிறப்பு முகாம்

image

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (செப்.17) மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தெரிவித்தார்.

error: Content is protected !!