News September 17, 2025

சென்னையில் மழை- மின் தடையா கவலை வேண்டாம்!

image

சென்னையில் மழை பெய்து வரும் நிலையில், மின்தடை ஏற்படும்போது, மின்னகம் (9498794987) எண்ணுக்கு கால் செய்து புகார் தெரிவிக்கலாம். அங்கு லைன் கிடைக்கவில்லை என்றால், சென்னை வடக்கு பகுதியில் வசிப்பவர்கள் 9444099255, மத்திய சென்னை பகுதியில் வசிப்பவர்கள் 9445850739, சென்னை மேற்கு பகுதியில் வசிப்பவர்கள் 9498378194, சென்னை தெற்கு பகுதியில் வசிப்பவர்கள் 9150056672 என்ற வாட்ஸ் அப் எண்களில் புகார் அளிக்கலாம்.

Similar News

News September 17, 2025

சென்னை: போக்குவரத்து கழகத்தில் பயிற்சி வாய்ப்பு

image

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (MTC) 2025-2026 ஆம் ஆண்டிற்கான Apprentice பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2021-2025 ஆண்டுகளில், பொறியியல்,பட்டயப்படிப்பு முடித்த மாணவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் வரும் அக்.18ம் தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும். இளைஞர்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளவும், வேலை வாய்ப்பை பெறவும் இது நல்ல வாய்ப்பு ஷேர் பண்ணுங்க.

News September 17, 2025

பெரியார் படத்திற்கு முதல்வர் மரியாதை

image

தந்தை பெரியார் 147 ஆவது பிறந்தநாள் இன்று (செப்.17) கொண்டாடப்படுகிறது. சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில், அவரது நினைவிடத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தந்தை பெரியார் படத்திற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News September 17, 2025

சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

image

சென்னையில் இருந்து 165 பயணிகளுடன் நேற்று இரவு பெங்களூருக்கு புறப்பட்ட விமானத்தில் நடுவானில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட நிலையில், அவசர அவசரமாக விமானம் மீண்டும் சென்னையில் தரையிறங்கியது. உடனடியாக மாற்று விமானம் ஏற்பாடு செய்து பயணிகள் பெங்களூருக்கு செல்ல அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பயணிகள் செல்ல தாமதம் ஏற்பட்டது.

error: Content is protected !!