News September 17, 2025
வேதாரண்யம்: இலவச மருத்துவ முகாம்

வேதாரண்யம் அருகே உள்ள தாணி கோட்டகம் நண்பன் வணிக வளாகத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நாளை 18ஆம் தேதி காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் குழந்தைகள் நலன், மகப்பேறு, எலும்பியல் மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட பொதுநல மருத்துவர்கள் பங்கேற்று சிகிச்சையும் மருந்துகளும் இலவசமாக வழங்க உள்ளதால் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News September 17, 2025
தவெகவினருக்கு நாகை போலீசாரின் கண்டிஷன்!

தவெக தலைவர் நடிகர் விஜய் 20ஆம் தேதி நாகை புத்தூர் ரவுண்டானாவில் பரப்புரை செய்கிறார். இந்நிலையில் விஜய் செல்லும் வாகனத்தை ரசிகர்கள் பின் தொடர கூடாது. வாகனத்தின் மேல் நின்று ரோடு ஷோ செய்யக்கூடாது. பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் வகையில் தொண்டர்கள் நடந்து கொள்ளக்கூடாது என்பது உட்பட 10 நிபந்தனைகளை தவெகவினருக்கு மாவட்ட காவல்துறை விதித்துள்ளது.
News September 17, 2025
நாகை ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு

கலைமகள் சபா சொத்துக்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பு வழங்கப்படுகிறது என்றும் இதுகுறித்த விரிவான அறிக்கையை 19ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நேரில் ஆஜராகி ஏன் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என விளக்கம் அளிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டுள்ளது.
News September 17, 2025
நாகை: செப்:30 கடைசி நாள், கலெக்டர்

நாகப்பட்டினம் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 சதவீத அரசு இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர செப்டம்பர் 30 கடைசி நாளாகும். பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் படிப்பு முடித்த பின் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை பெற்று தரப்படும் எனவும் அறிவித்துள்ளார். மற்ற மாணவர்களுக்கும் SHARE பண்ணுங்க!