News September 17, 2025
மூலிகை: மருத்துவ குணங்கள் அடங்கிய செங்காந்தள்!

சித்த மருத்துவத்தில் செங்காந்தள் செடி பல்வேறு பிரச்னைக்கு பயன்படுகிறது.
*செங்காந்தள் செடியின் வேருடன் குப்பைமேனி வேர், நீலி வேர் சேர்த்து அரைத்து, அரை நெல்லிக்காய் அளவு 3 நாள்கள் சாப்பிட்டால், பாம்பு- தேள் கடி விஷம் இறங்கும்.
*பிரசவத்தின்போது நஞ்சுக்கொடி இறங்காமல் அவதிப்படும் பெண்களுக்கு பச்சை செங்காந்தள் வேர்க்கிழங்கை அரைத்து அடிவயிறு, உள்ளங்கை, உள்ளங்கால் போன்ற இடங்களில் தடவுவார்கள். SHARE.
Similar News
News September 17, 2025
பெரியாருக்கு விஜய் மரியாதை

தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், அவரது சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், சமூக சீர்திருத்த கொள்கை, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் போன்ற சீர்திருத்த சிந்தனைகள் வாயிலாக நம் மக்களுக்காக உழைத்தவர் பெரியார் என X தளத்தில் விஜய் பதிவிட்டுள்ளார். முன்னதாக நாகை, திருவள்ளூர் மாவட்ட செயலாளர்களிடம், பரப்புரை பயணம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
News September 17, 2025
திருமணத்துக்கு தங்கம்: விண்ணப்பிப்பது எப்படி?

ஏழை விதவை தாய்மார்களின் மகள்களின் திருமணத்துக்கு ₹50 ஆயிரமும், 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. ஏழை விதவை மகள் திருமண நிதியுதவி திட்டத்தில் பயன்பெற, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹72,000-க்கு மேல் இருக்கக்கூடாது. திருமணத்துக்கு 40 நாள்களுக்கு முன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பியுங்கள். விண்ணப்ப நிலையை https://edistricts.tn.gov.in/socialwelfare-ல் அறிந்துகொள்ளலாம்.
News September 17, 2025
தமிழகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்!

சென்னை அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்களுடன் கூடிய புதிய சர்வதேச நகரம் அமைக்க TIDCO டெண்டர் கோரியுள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிறகு, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டையில் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தது. அதில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் இறுதி செய்யப்பட்ட நிலையில், மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.