News September 17, 2025

பெரியார் வழியில் 2026-ல் அதிமுக ஆட்சி: இபிஎஸ்

image

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாளில், அவர் வகுத்த சமூகநீதி பாதையில் பயணித்து, 2026-ல் அதிமுக தலைமையில் உண்மையான சமத்துவ ஆட்சியை அமைக்க உறுதியேற்போம் என EPS அழைப்பு விடுத்துள்ளார். பெரியாரின் 147-வது பிறந்தநாளையொட்டி, தனது X பக்கத்தில், கேள்விகள் கேட்டு பகுத்தறிவை விதைத்தவர் எனவும், உணர்வுகளை தட்டி எழுப்பி உரிமைக்காக போராடியவர் #PeriyarForever என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News September 17, 2025

போன் ஹெல்தியா இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

போனுக்கும் full body health check-up செய்து, அனைத்து பாகங்களும் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டியது அவசியம். முதலில் ‘Dialpad’-ஐ ஓபன் பண்ணுங்க *Brand-க்குரிய ரகசிய குறியீட்டை டயல் செய்யவும். குறியீட்டுக்கு <<17737284>>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க *ஓப்பனாகும் மெனுவில் ஒரு பாகத்தின் பெயரை கிளிக் செய்தால், அது எத்தனை % சரியாக உள்ளது என காட்டும். SHARE IT.

News September 17, 2025

சீமான் மீது தவெகவினர் போலீஸில் புகார்

image

விஜய்யின் அரசியல் வருகையை முதலில் வரவேற்றவர் சீமான். ஆனால், சமீபகாலமாக உன்னை(விஜய்யை) யார் அரசியலுக்கு வா என்று அழைத்தது என்ற தொனியில் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் தவெகவினர் சீமான் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில், கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் விஜய்யை சீமான் ஒருமையில் பேசியதாக கூறி தவெகவினர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

News September 17, 2025

ADMK அதிருப்தி தலைகளுக்கு ‘NO’ சொன்ன அமித்ஷா?

image

அதிமுக அதிருப்தி தலைவர்கள் யாரையும் இனி சந்திக்க மாட்டேன் என EPS-க்கு, அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் முகாமிட்டுள்ள EPS, முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்த சந்திப்பின்போது, திமுக அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்கள், டாஸ்மாக் முறைகேடு குறித்த விசாரணையை வேகப்படுத்தவும் EPS வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!