News September 17, 2025
சிவகங்கை: வேலைநாடும் இளைஞர்கள் கவனத்திற்கு

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது வரும் செப்.19 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 3.00 மணி வரை சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடைய வேலைநாடுநர்கள் கலந்து கொள்ளவும். மேலும் தகவலுக்கு இந்த <
Similar News
News September 17, 2025
சிவகங்கை: கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு இ.சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News September 17, 2025
சிவகங்கை: 50% மானியத்தில் வாங்க மிஸ் பண்ணாதீங்க!

சிவகங்கை மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா? அப்போ தமிழக அரசு கொடுக்கும் 5,000 மானியத்தை புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால் தாராளமாக APPLY பண்ணலாம். தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க தொடர்புக்கு:04575-240426. மற்றவர்களுக்கும் SHARE செய்து APPLY பண்ண சொல்லுங்க.
News September 17, 2025
சிவகங்கை: பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500

சிவகங்கை மக்களே; 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான ‘தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 11.10.2025 அன்று நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in இணையத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்பிக்கலாம். (தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும்) SHARE IT