News September 17, 2025
திருவள்ளூர்: வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு

திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில், வரும் 19ம் தேதி 25-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 17, 2025
திருவள்ளூர்: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

திருவள்ளூர் மக்களே, உங்களுக்கு தேவையான 1.சாதி சான்றிதழ், 2.வருமான சான்றிதழ், 3.முதல் பட்டதாரி சான்றிதழ், 4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ், 5.விவசாய வருமான சான்றிதழ், 6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ், 7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற<
News September 17, 2025
திருவள்ளூர்: புறநகர்களை இணைக்கும் வகையில் ரயில் தடம்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி முதல் ஸ்ரீபெரும்புதூர் வழியாக கூடுவாஞ்சேரி வரை புதிய ரயில் பாதை திட்டத்தை ரூ.3.56 கோடி செலவில் விரிவாக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் வளர்ந்து வரும் சென்னை புறநகர் பகுதிகள் பயன்பெறும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 58 கி.மீ., துாரம் உடைய இப்புதிய ரயில் பாதைக்கு, தனியாரிடமிருந்து, 229 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட உள்ளது.
News September 17, 2025
திருவள்ளூர்: மன அமைதி பெற செல்ல வேண்டிய கோவில்

திருவள்ளூர், திருமழிசையில் அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கரிகாலப்பெருவளத்தானின் வெட்டிய கையை மீண்டும் பொருத்தியதால் இவர் கைதந்தபிரான் என அழைக்கப்படுகிறார். இந்த கோவிலில் வந்து வழிப்பாட்டால் மன நிம்மதி கிடைக்குமாம். இக்காலத்தில் மன நிம்மதி தானே முக்கியம். தனக்காவும் குடும்பத்திற்காகவும் ஓடி ஓடி உழைப்பவர்கள் இங்கு ஒரு நாள் சென்று மன அமைதியை பெறலாம். *நண்பர்களுக்கும் பகிருங்கள்*