News September 17, 2025
சேலம்: மின்தடை அறிவிப்பு – உங்கள் பகுதியும் உள்ளதா?

அஸ்தம்பட்டி, பேளூர், கே.ஆர்.தோப்பூர், சங்ககிரி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அஸ்தம்பட்டி, வின்சென்ட், மறவனேரி, ஏற்காடு, 4 ரோடு, சின்னமநாயக்கன்பாளையம், புழுதிக்கொட்டை,கே.ஆர்.தோப்பூர், முத்துநாயக்கன்பட்டி, இரும்பாலை, படைவீடு, சங்ககிரி மேற்கு, சங்ககிரி ரெயில் நிலையம், ஆகிய பகுதிகளில் இருக்காது.
Similar News
News September 17, 2025
மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர்ப்பு சிறப்பு முகாம்

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (செப்.17) மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தெரிவித்தார்.
News September 17, 2025
சேலம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

சேலம் மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News September 17, 2025
சேலம்: மத்திய புலனாய்வு துறையில் வேலை!

சேலம் மக்களே.. மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
▶️கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.
▶️சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100.
▶️வயது வரம்பு: 18-27 வரை.
▶️கடைசி தேதி: செப்டம்பர் 28.
இந்த <