News April 12, 2024

தேர்தலில் போட்டியிடாத தலைவர்கள் (3)

image

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோர் கட்சி தலைமை கேட்டுக் கொண்டும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் மக்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத வேட்பாளர்களை அவர்களின் சொந்த தொகுதிகளில் காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. தேர்தலில் தலைவர்கள் போட்டியிடாததற்கு பல காரணம் கூறப்பட்டாலும், தோல்வி பயமே காரணம் என பொதுவாக கூறப்படுகிறது.

Similar News

News January 21, 2026

கூட்டணி அமைப்பதில் கோட்டை விடுகிறதா தவெக?

image

இண்டியா கூட்டணியில் DMK + INC + VCK + LEFT + MDMK + MNM + IUML கட்சிகளும், NDA கூட்டணியில் BJP + AIADMK + PMK + AMMK + TMC+ IJK + TMMK கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. தேர்தல் அரசியலில் கூட்டணி முக்கியமானவை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கூறியும், இதுவரை தவெகவுடன் யாரும் கூட்டணி அமைக்கவில்லை. தேமுதிக, உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே கூட்டணியை உறுதி செய்யாமல் இருக்கும் நிலையில், TVK தனித்துவிடப்பட்டுள்ளதா?

News January 21, 2026

நாளை காலை வீட்டை விட்டு வெளியே வராதீங்க

image

தமிழகத்தில் மீண்டும் உறைபனி ஏற்பட வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் உறைபனி நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், காலை வேளையில் அவசியமின்றி வெளியே செல்வதை தவிருங்கள் நண்பர்களே!

News January 21, 2026

பிரபல டிவி சேனலை வாங்குகிறாரா விஜய்?

image

2026 தேர்தல் நெருங்கும் நிலையில் தங்களுக்கு சாதகமாக செயல்பட டிவி சேனல் ஒன்றை தொடங்க தவெக முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக சேனல் தொடங்க உரிமம் வாங்குவது உள்ளிட்ட பல சவால்கள் இருப்பதால், ஏற்கெனவே செயல்படும் முன்னணி செய்தி சேனலை வாங்கும் நடவடிக்கையில் விஜய் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அந்நிறுவனம் அதிகப்படியான தொகை கேட்பதால் வாங்குவதில் இழுபறி நீடிக்கிறதாம்.

error: Content is protected !!