News September 17, 2025

கடலூர்: ரூ.96 லட்சம் மோசடி செய்த பெண் கைது

image

புதுச்சேரியை சேர்ந்தவர் முருகன் (39). இவரை நிதி நிறுவன இயக்குனர் ஆக்குவதாக கூறி முதலியார்பேட்டையை சேர்ந்த சதீஷ்குமார், அவரது மனைவி ஐஸ்வர்யா, அவரது தாய் முனியம்மாள் என்கிற ஜீவா ஆகியோர் கடலூரில் உள்ள உறவினர் வீட்டில் வைத்து ரூ.96 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இதுகுறித்து கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து முனியம்மாளை நேற்று கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

Similar News

News September 17, 2025

கடலூர்: செம்மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

image

விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் நேற்று தே.கோபுராபுரம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தியபோது டிரைவர் தப்பியோடினார். லாரியை சோதனை செய்ததில், செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்கு பதிந்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

News September 17, 2025

கடலூர்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

image

கடலூர் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <>இணையத்தளத்தில்<<>> இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கியாஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News September 17, 2025

கடலூர்: இன்று சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டம், கோவிலானூர் கிராமத்தில் அமைந்துள்ள மாதா பள்ளி, நல்லூர் வட்டம், தொளார் அரசினர் மேல்நிலைப்பள்ளி, மற்றும் பண்ருட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் இன்று (17/09/2025) புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் சிறப்பு நடைபெற உள்ளது‌. இதில், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!