News September 17, 2025
குமரி: விளையட்டு விபரீதமானது; இளைஞர் உயிரிழப்பு

கொல்லங்கோடு பகுதி பட்டதாரி ஜெய்சங்கரன்(23) அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்தார். இவர் நேற்று (செப்.16) வீடியோ காலில் செல்போனில் காதலியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது தகராறு ஏற்பட்டதால், காதலியை மிரட்டுவதற்காக விளையாட்டாக போர்வையால் தூக்கில் தொங்கி உள்ளார். விளையாட்டு விபரீதமாகி ஜெய்சங்கரன் கழுத்தில் போர்வை இறுகியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து நித்திரவிளை போலீசார் விசாரணை.
Similar News
News September 17, 2025
குமரி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

குமரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News September 17, 2025
குமரி: செப்.25, அக்.10 மாணவர்களே MISS பண்ணாதீங்க

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்:
செப். 25-ந் தேதி மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியிலும்,
அக்.10ம் தேதி சுங் கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரியிலும் சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. முகாம்களில் மாணவர்கள் கலந்து கொண்டு கல்விக்கட னுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் https://pmvidyalakshmi.co.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
News September 17, 2025
குமரி: பிரிந்து சென்ற மனைவி; கணவர் தற்கொலை

பூதப்பாண்டி அருகே ஞாலம் பகுதி மெக்கானிக் மகேஷ்(37). 4 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தகராறில் 2 பிள்ளைகளுடன் இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். மனைவி பிரிந்த வருத்தத்தில் இருந்த மகேஷ் 2 நாட்களுக்கு முன்பு தடிக்காரன்கோணத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று (செப்.16) மகேஷ் உயிரிழந்தார். இதுக்குறித்து கீரிப்பாறை போலீசார் விசாரணை.