News September 17, 2025
விருதுநகர்: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

விருதுநகர் மக்களே; 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான ‘தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 11.10.2025 அன்று நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in இணையத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்பிக்கலாம். (தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும்) *ஷேர்
Similar News
News November 6, 2025
விருதுநகரில் துப்பாக்கியால் சுட்டு பிடித்த அதிகாரிகள்

காப்புக்காடுகள் பகுதியில் 3 கிமீ மேல் வரும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறைக்கு அனுமதி என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இதையடுத்து விருதுநகர் அருகே மன்னார்குடியில் பயிர்களை சேதப்படுத்திய 1 1/2 வயது காட்டுபன்றியை அக்.24 அன்று வனத்துறையினர் சுட்டு கொன்றனர். இதேபோல் நேற்று இரவு ஆவுடையாபுரத்தில் ஸ்ரீவி வனத்துறை அதிகாரி செல்வமணி தலைமையில் ஒரு காட்டுப்பன்றியை சுட்டு பிடித்தனர்.
News November 6, 2025
சிவகாசியில் சுட்டுப் பிடிக்க அனுமதிக்க கோரி மனு

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காட்டு பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் சிவகாசி அருகே ஈஞ்சார் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களை தொடர்ந்து காட்டு பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு ஆவண செய்திட வலியுறுத்தி சார் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
News November 6, 2025
அருப்புக்கோட்டையில் தவறி விழுந்து உயிரிழப்பு

காரியாபட்டி அருகே வக்கனாங்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் ராதா (58). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று (நவ. 5) பிற்பகல் வேளையில் அருப்புக்கோட்டை சின்னப்புளியம்பட்டி பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கால் இடறி கீழே விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


