News September 17, 2025
ஓசூரில் 2 இளைஞர்கள் விபத்தில் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடந்த சாலை விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அசோக்குமார் மகன் நவீன் (19) தர்மபுரி மாவட்டம், பாலாலஹள்ளியை சேர்ந்த சுதர்சன் (19) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு வாகனம் மோதியதில் பலியாகினர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 17, 2025
கிருஷ்ணகிரி: தொடங்கியது புரட்டாசி! இங்கெல்லாம் போங்க

இந்த ஆண்டு புரட்டாசி மாதம் இன்று தொடங்குகிறது. இந்த மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதமாகும். மேலும் இந்த மாதத்தில் விரதம் இருப்பதும், சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது என நம்பப்படுகிறது. கிருஷ்ணகிரியில் இருக்கும் சில முக்கிய பெருமாள் கோயில்
✅ சூளகிரி வரதராஜப் பெருமாள் கோயில்
✅ கனவாபட்டி வெங்கடரமண சாமி கோயில்
✅ தேன்கனிக்கோட்டை பேட்டைராய சுவாமி கோயில் (SHARE)
News September 17, 2025
கிருஷ்ணகிரி: 10ஆம் வகுப்பு போதும்! ரூ.69,100 வரை சம்பளம்

மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு,
▶️ கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
▶️ சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100
▶️ வயது வரம்பு: 18-27 வரை (கணவரை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்றவர்கள், சட்டப்படி பிரிந்து வாழ்பவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு)
▶️ கடைசி தேதி: செப்டம்பர் 28
இந்த <
News September 17, 2025
கிருஷ்ணகிரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செப்டம்பர் 19 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கிருஷ்ணகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் இதில் பங்கேற்கலாம். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!