News September 17, 2025

நீலகிரியில் மர்மமாக இறந்து கிடந்த புலி!

image

நீலகிரி மாட்டம், முதுமலை புலிகள் காப்பகம், சீகூர் வனச்சரகத்திற்குட்பட்ட உப்பல்லா ஓடைப் பகுதியில், ஐந்து வயது மதிக்கத்தக்க பெண் புலி ஒன்று இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், வேறொரு புலியுடன் ஏற்பட்ட சண்டையில் தாக்கப்பட்டதால் அந்த புலி இறந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News September 17, 2025

நீலகிரியில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்!

image

மாதந்தோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிங்கர் போஸ்டில் உள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் ( 19.09.2025) நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியரின் செய்தி குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 17, 2025

உதகை மாரியம்மன் கோயிலில் மோடி பெயரில் சிறப்பு பூஜை

image

உதகை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் முன்னிட்டு நகர பாஜக சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் உதகை நகர  தலைவர் ரித்து கார்திக், மாவட்ட முன்னாள் தலைவர் மோகன்ராஜ் , மாவட்ட பொருளாதார அணி தலைவர் நித்தின் சந்திர சேகர், மாவட்ட துணை தலைவர் அருண், நகர துணை தலைவர்கள்  சுதாகர் மஞ்சுநாத், பட்டாபிராமன்  மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News September 17, 2025

நீலகிரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள அறிவிப்பு: குன்னூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலும், கூடலூர் பழங்குடியினர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்திலும் கடந்த 12ஆம் தேதி முதல் நடைபெற்ற வருகிறது. பயிற்சி காலம் ஓராண்டு முதல் 2ஆண்டு வரை, கல்வித் தகுதி 8 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை, வயது 18 முதல் 40 வயது வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!