News September 17, 2025
மதுரை மேயரின் கணவர் ஜாமீன் மனு தள்ளுபடி

வரி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மேயர் உமாவின் கணவர் பொன் வசந்த் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
ஆக.12ம் தேதி அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார்.
ஜாமீன் கோரி அவர் உடல்நிலை மோசம் மற்றும் வழக்கில் தனது பெயர் காரணமின்றி சேர்க்கப்பட்டதாக வாதிட்டார். வெளிவந்தால் சாட்சிகளை கலைக்க நேரிடும் என்பதால் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
Similar News
News September 17, 2025
மதுரை: மழைக்காலங்களில் இந்த எண்கள் உதவும்

மதுரை மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வரும் சமயத்தில், மரங்கள் சாய்வது, மின்கம்பிகள் அறுந்து விழுவது போன்ற இடர்பாடுகள் நடப்பது இயல்பாகியுள்ளது. ஆகவே, மதுரை மக்கள் அத்தகைய சூழலை எளிதில் அணுக அதற்கான எண்கள்:
▶️கட்டணமில்லா தொலைபேசி எண் : 1077
▶️மாவட்ட அவசர கட்டுப்பாடு அறை :0452 – 2546160
▶️வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) :98949 70066
▶️ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) : 0452 – 2533272 *SHARE IT
News September 17, 2025
மதுரை: அக்.மாத சிறப்பு ரயில்களின் விவரம்

தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், பண்டிகை விடுமுறையை முன்னிட்டு மதுரை வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு வருகிற 29ஆம் தேதி மற்றும் அக்டோபர் மாதம் 6, 13, 20 ,27 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து மாலை 3:30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2:45 மணிக்கு மதுரை ர மறுநாள் அதிகாலை 5 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். *ஷேர் பண்ணுங்க
News September 17, 2025
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் மதுரை வருகை

மத்திய நிதித்துறை அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராம் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி மதுரை வருகை தர திட்டமிட்டு இருக்கிறார். மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு உணவுப் பொருட்கள் வியாபாரிகள் சங்கம் சார்பாக 80வது ஆண்டு விழா நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வியாபாரிகள் மத்தியில் உரையாற்றுகிறார்.