News September 17, 2025
‘மதராஸி’ படத்தின் OTT ரிலீஸ் எப்போது?

‘மதராஸி’ படம் வரும் அக்., 3-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 5-ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதனால் தான், முதல் 2 நாள்களில் ₹50 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 15 நாள்களை கடந்தும் வசூல் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை என கூறப்படுகிறது.
Similar News
News September 17, 2025
பனிச்சறுக்கில் தமிழக வீராங்கனை சாதனை

சிலியில் நடைபெற்ற ‘கிராஸ் கன்ட்ரி’ பனிச்சறுக்கு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பவானி வெண்கலம் வென்றுள்ளார். 5 கி.மீ. பிரிவில் பங்கேற்ற அவர் பந்தய தூரத்தை 21 நிமிடத்தில் கடந்து மூன்றாம் இடம் பிடித்தார். இதன்மூலம் ‘கிராஸ் கன்ட்ரி’ போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என பெருமையையும் பவானி பெற்றார். அதேபோல் 3 கி.மீ. பிரீஸ்டைல் ஸ்பிரின்ட் போட்டியிலும் பவானி வெண்கலம் வென்றார்.
News September 17, 2025
அமித்ஷாவை சந்தித்தது ஏன்? EPS விளக்கம்

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தது தொடர்பாக, EPS தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் கடிதம் வழங்கியதாக தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதிமுக ஒன்றிணைப்பு விவகாரம் தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பாரத ரத்னா கோரிக்கை கடிதம் வழங்கியதன் போட்டோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
News September 17, 2025
திறக்காத 5 கதவுகள்

உலகில் தற்போதுவரை பல விஷயங்கள் தெரியாமல் உள்ளன. வரலாறு தொடர்புடைய சில இடங்களில் என்ன இருக்கிறது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. பயத்தில் சில இடங்கள் மூடப்பட்டு இருக்கிறது. அதுபோன்று உலகின் இதுவரை திறக்கப்படாத 5 கதவுகள் என்ன என்று போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக பாருங்க. இதை தவிர வேறேதும் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.