News April 12, 2024

பிரதமர் மோடி பேசாமல் இருப்பது ஏன்?

image

தமிழகத்தின் நிதி பற்றாக்குறை குறித்து முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய கடிதத்திற்கு பிரதமர் மோடி பதில் தரவில்லை என்று தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அண்ணாமலையைப் பற்றி பேசியதற்கு பதில் கூறிய பிரதமர் வெள்ள நிவாரணம் பற்றி ஏன் பேசவில்லை. தமிழகத்தின் தேவை குறித்து மோடி பேசாமல் இருப்பது ஏன்? தமிழக மக்களை பாஜகவினாரால் இனியும் ஏமாற்ற முடியாது எனக் கூறினார்.

Similar News

News January 12, 2026

முன்னாள் துணை ஜனாதிபதி AIIMS-ல் அனுமதி

image

முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உடல்நலக்குறைவால் டெல்லி AIIMS-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு என்ன பிரச்னை என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், நாளை அவரின் உடல்நிலை மற்றும் டிஸ்சார்ஜ் தொடர்பாக AIIMS அறிக்கை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News January 12, 2026

நேந்திரம் பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

image

நேந்திர வாழைப்பழத்தில் பல்வேறு சத்துகள் நிறைந்துள்ளதால், வாரத்தில் 4 நாள்களாவது சாப்பிடுவது, பின்வரும் நன்மைகளை தருவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். *செரிமான மண்டலத்தை சீராக்குகிறது *உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது *ரத்த அழுத்தத்தை சீராக்கி, இதயத்தை பாதுகாக்கிறது *எலும்புகளை வலுப்படுத்துகிறது *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது *சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்துக்கு நல்லது.

News January 12, 2026

முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்

image

தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி மனைவி மறைவுக்கு CM மு.க.ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். வத்சலா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தாத நிலையில், தொலைபேசி மூலம் அழகிரியை தொடர்பு கொண்டு தனது இரங்கலை கூறியுள்ளார். இதற்கிடையில், திமுக நிர்வாகிகள், விசிக ரவிக்குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

error: Content is protected !!