News April 12, 2024
என்னாது தேர்தல் தேதி மாறிவிட்டதா?

தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சிகள், தங்களது சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சுவர் விளம்பரமும் செய்கின்றன. காங்., சார்பில் செய்யப்பட்ட சுவர் விளம்பரத்தில் கை சின்னத்துடன் “தேர்தல் 19.4.23” என எழுதப்பட்டுள்ளது. இதைப்பார்த்த எதிர்தரப்பினர், தேர்தல் நாளையே காங்., கட்சி மாற்றிவிட்டதாக கிண்டல் செய்கின்றனர்.
Similar News
News July 4, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹440 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹440 குறைந்தது. இதனால், 22 கேரட் ஒரு கிராம் ₹9,050-க்கும், சவரன் ₹72,400-க்கும் விற்பனையாகிறது. கடந்த 3 நாள்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், சர்வதேச <<16934070>>சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்<<>> காரணமாக இந்தியாவிலும் தங்கம் விலை சற்று சரிந்துள்ளது.
News July 4, 2025
சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்

ஜூலை 7-ம் தேதி சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என வணிகவரித்துறை தெரிவித்துள்ளது. ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதில் 150 டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் 2 சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதில் 300 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனி மாத சுபமுகூர்த்த நாளையொட்டி இந்த ஏற்பாடு செய்யப்படுள்ளது.
News July 4, 2025
அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. திருவள்ளூர், கோவை, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும்,சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.